'வான் புகழும்' வான் கா - வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF VAN GOGH


Admin
வின்சன்ட் வான்கா தனது வாழ்நாளில் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்றுதான். வான்கா சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து மறைந்த இணையில்லாத கலைஞன்

இவரின் ஓவியங்களுக்கு இன்று விலை மதிப்பிடுவது சிரமமான காரியம் இருந்தாலும் உலகின் மிகப்பொரிய பணக்காரர்களும் புராதன ஓவியங்களைச் சேகரிப்பவர்களும் இவர் பூர்த்தி செய்யாமல் விட்ட ஓவியங்களுக்குக்கூட பல கோடி ரூபாய் தரப் போட்டி போடுகிறார்கள்.

'வான் புகழும்' வான் கா - வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF VAN GOGH Vangog10

ஓவியர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஆதிகால மனிதன் வரைந்த குகை ஓவியங்களிள் ஆரம்பித்து ரேனேசான்ஸ் என்று பல படிகளைக்க் கடந்து இம்பிரஷனிஸம் என்ற ஸ்டைலில் ஓவியங்கள் வரையப்படடுமுக் கொண்டிருந்த காலம் இது.அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டு.இந்த காலகட்டத்தில் ஹாலந்து நாட்டில் பிறந்த வின்சட் வான் கா என்ற ஓவியம் ஓவியக் கலைக்கே ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்தான் அவன் வரைந்த ஓவியங்களைத்தான் சரித்திரம், ஓவிய ஸ்டைலுக்கே மூலம் என்று போற்றிப் புகழ்ந்தது.

வான் காவின் ஓவியங்களைப்போலவே அவரது வாழ்கையும் உலகப் பிரசித்தி பெற்றது மைக்கல் ஏஞ்சலோ பிக்காஸோ போன்ற ஓவியர்கள் கூட எத்தனையோ இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார்கள் என்றாலும் இந்த உலக மகா கலைஞனின் அளவுக்கு வேறு எவராவது கஷ்டப்படிருப்பார்களா என்பது சந்தேகமே.

இவர் பிறப்பதற்க்கு முன்பே இவரது குடும்பத்தை சோகம் படர்ந்திருந்தது
1853ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வான்கா பிறந்தார் அதற்க்கு ஒரு வருடத்திற்க்கு முன்னால் இதே திகதிகளில் பிறந்து சில வாரங்களுக்குள்ளாகவே இறந்து போய்விட்ட இவரது அண்ணனின் பெயரையே இவருக்கும் சூட்டினார்கள்.

சிறுவன் வான்காவுக்கு நினைவு தெரிய ஆரம்பித்த நாட்களிலேயே இறந்து போன தன் அண்ணனின் பெயரைத் தாங்கி வாழ்வதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்ப்பட்டது வான் காவின் அப்பா ஓரு எழ்மையான பிராட்டஸ்டண்ட் மத போதகர் அவரிடம் இருந்து உபதேசங்கள் கிடைத்தளவிற்க்கு சிறுவன் வான்காவிற்க்கு அப்போது வாழ்கை கிடைக்க வில்லை.

இதெல்லாம் சிறுவன் வான் காவின் மனதைப் பிழிந்து எடுக்க கோபக்காரனாகவும் முரடனாகவும் மாறினான் வான் கா. வான் காவின் தொல்லை பொறுக்காமல் பல மைல் தள்ளி இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு இவனை பெற்றோர் அனுப்பினார்கள் வான்காவுக்கு படிப்பின் மீது நாட்டம் வரவில்லை கடைசி முயற்சியாக வெளியூரில் ஓவியக் கூடம் நடத்தும் உறவினர் வீட்டுக்கு இவனை எடுபிடி வேலைக்கென அனுப்பிவைத்தனர்.அங்கு தான் ஓவியங்கள் என்றால் என்ன என்பதை சிறுவன் வான்கா பார்த்தான்.அப்போது வான் காவிற்க்கு வயது பதினாறு வாழ்கை என்னவாக ஆவது என்று தெரியாமல் குழம்பிய வான் கா தன் அப்பாவைப் போலவே தானும் மத போதகர் ஆகிவிடலாமோ என்று கூட யோசித்தார் சகோதரப்பாசம் தாய் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய வான்கா லண்டனில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த சமயம் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடைய பெண்ணைக் காதலித்தார் .அது ஒரு தலைக் காதல் அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை காதலில் தோல்வியடைந்த துக்கத்தில் அவர் விலை மாதுகளின் வீடுகளில் சரனடைந்து தனது வாழ்கையினையும் வீணாக்கிக்கிக் கொன்டார்.அதன் பின் அவர்களிலேயே ஒரு பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார்.மனைவியாக வந்தவள் ஒரு அடங்காதவள் வான் கா தனது மன வாழ்கையில் கூட நிம்மதியடையவில்லை அவள் மிகவும் கொடுமைப்படுத்தினால் !பல வருடங்கள் வான் கா பேசாமல் இருந்தாலும் அதற்க்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியாமல் இருந்ததால் கடைசியில் இத்திருமணமும் முறிந்து போனது.

தனது 33 வது வயதில் அவர் ஓவியன் ஆகலாம் என்று முடிவெடுத்தபோது பெயின்டும் பிறசும் வாங்கக் கூட அவரிடம் பணம் இருக்கவில்லை வான் கா வின் வாழ்கையில் அவர் மீது அன்போடும் கரிசனையோடும் இருந்த ஒரே உறவு அவரது சகோதரர் .அவரின் பண உதவிமூலமே வான் கா தனது வாழ் நாள் முழுவதையும் கழித்தார்.இவர் ஒவியங்கள் தீட்டினார் அவ் ஓவியங்கள் தான் ஓவிய சரித்திரத்தையே மாற்றியமைக்கப் போகின்றது என்று யாரும் அறிந்திருக்க வில்லை கடைசிக் காலத்தில் அவரின் புத்தி பேதலித்திருந்தது பைத்தியம் முற்றி தனது காதை தானே அறுத்துக்கெண்டு நடுத்தெருவில் ஓடும் அளவிற்க்கு அவரது பைத்தியம் முற்றி இருந்தது மனநல மருத்துவமனைக்கும் வீட்டுக்குமான இடம் மாற்றி கொண்டிருந்தபோது தான் காலத்தை வெல்லப் போகும் 200 ஓவியங்களை அவர் தீட்டினார் அதுவும் வாழ்வின் கடைசி நாள் நெருங்க நெருங்க ஒருநாளைக்கு ஒரு அமர ஓவியம் என்ற வேகத்தில் வான் கா ஓவியங்களைப் பெற்றெடுத்தார் இருந்தாலும் தனது வாழ்நாளில் அவர் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்று தான் அவர் தங்கியிருந்த வாடகைப்பணத்திற்க்கு ஈடாக ஒரு சமயம் அவரது ஓவியத்தை வீட்டுக்காரர் வாங்கி போயிருக்கிறார்.இப்போது அந்த ஒவியத்தின் விலை பல கோடி.

கடைசியில் 1890ம் ஆண்டு அவர் ஒரு நாள் துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்டு இறந்து போனார்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES