டிஜிட்டல் மார்க்கெட்டிங் - Digital Marketing


Admin
டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) - பெரியளவில் வளரும் தொழில்துறை:

பல தொழில் நிறுவனங்கள், தங்களின் வணிகச் செயல்பாடுகளை ஆன்லைன் முறையில் மாற்றிக்கொண்டு விட்டதால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ்களுக்கான தேவை பெரியளவில் அதிகரித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில், 1.5 லட்சம் பணி வாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் விளம்பரம், சோசியல் மீடியா மற்றும் வெப்சைட் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சேவைத் துறைகளில், ஒரு டிஜிட்டல் அவுட்சோர்சிங் மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

புதிய வாய்ப்புகள்:

டிஜிட்டல் மீடியமை நோக்கி, நிறுவனங்களும், பயனாளிகளும் தங்களின் கவனத்தை திருப்புவதால், அத்துறையில், 2016ம் ஆண்டில், 1.5 லட்சம் பணி வாய்ப்புகள் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த 2014ம் ஆண்டில் மட்டும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில், 25,000 புதிய பணி வாய்ப்புகள் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. வேகமாக அதிகரித்துவரும் இ-காமர்ஸ் வணிக நடவடிக்கையால் மட்டுமின்றி, அதிகளவிலான இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் பயன்பாடு ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பற்றாக்குறை:

ஆனால், உண்மை நிலை என்னவெனில், தேவையைவிட, கிடைக்கும் தகுதியுள்ள பணியாளர்கள் மிகவும் குறைவு என்பதுதான். ஒவ்வொரு தனி தயாரிப்பும்(brand), டிஜிட்டல் மார்க்கெட்டிங் வியூகத்தில் வைக்கப்படுவதால், அதை செயல்படுத்துவதற்கான ஆட்களின் தேவை கட்டாயமாகிறது. இத்துறைக்கு தேவையான திறனும், தகுதியும் உடைய பணியாளர்கள் போதுமான அளவில் கிடைப்பது இன்றளவில் மிகவும் சிக்கலான சூழலாகும்.

இன்றைய வணிக உலகம் தனது அன்றாட செயல்பாட்டில் மிகப்பெரிய மாறுதல்களை சந்தித்துள்ளது. நிறுவனங்கள், தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தொடர்புகொள்ளும் முறையில், பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. டிஜிட்டல் மார்க்கெட்டிங்தான் அந்த மாற்றம்.

பெரிய மாற்றம்:

இத்தகைய பெரு மாற்றம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களின் தேவையை பெரியளவில் அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில், இந்தியா, பெரியளவிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங் மையமாக உருவெடுத்து வருகிறது.

ஏனெனில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பல புராஜெக்ட்டுகள் வாங்கப்பட்டு, இந்திய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. வணிக உலகைப் பொறுத்தவரை, இ-காமர்ஸ் துறையானது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களை பெரியளவில் பணியமர்த்தும் ஒரு களமாக மாறியுள்ளது.

பணி வாய்ப்பு:

கார்ப்பரேட் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுவோர் மற்றும் புதிதாக படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் ஆகியோருக்கு சிறப்பான பணி வாய்ப்புகளை டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வழங்குகிறது.

எதிர்கால வாய்ப்புகள்:

இத்துறையானது, சிறிதுகாலம் மட்டுமே பெரியளவில் இருந்து, பின்னர் அப்படியே அமுங்கிப்போய், பலர் வேலை இழக்கும் நிலைக்கு வருதல் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொண்டிருக்க தேவையில்லை என்றே இத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில், நாளுக்கு நாள், இத்துறை விரிவடைந்து, இதுதொடர்பான பணி வாய்ப்புகள் எதிர்காலத்தில் பெருகி நிற்கும் என்று அவர்கள் உறுதி கூறுகிறார்கள்.

இதர பிரிவுகள்:

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில், வணிகப் பிரிவு மட்டுமே பிரதானமானதல்ல. அதுதவிர, சோசியல் மார்க்கெட்டிங், கன்டென்ட் கிரியேஷன் மற்றும் மேனேஜ்மென்ட், Search மார்க்கெட்டிங், ஈமெயில் மார்க்கெட்டிங், அனலிடிக்ஸ் மற்றும் வீடியோ புரடக்ஷன் போன்ற பல பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் பரவிக் கிடக்கின்றன.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES