4 டன் நாணயங்களை கொடுத்து சொகுசு கார் வாங்கிய பெட்ரோல் நிலைய ஊழியர்!


சீனாவில், 4 டன் எடை கொண்ட நாணயங்களை கொடுத்து சொகுசு காரை வாங்கியிருக்கிறார் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர். அவரது பெயர் கேன். கிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்திலுள்ள சென்யாங் நகரை சேர்ந்தவர்.

பெட்ரோல் நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டுனர்கள் தரும் நாணயங்களை சேர்த்து வைத்து கார் வாங்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன், டீலர்ஷிப்பை அணுகியுள்ளார்.

மேலும், தன்னிடம் நாணயங்களாக இருப்பதையும் கூறியுள்ளார். இதனை டீலர்ஷிப் உரிமையாளரும் ஏற்றுக் கொண்டார். அதன்படி, தன்னிடம் இருந்த நாணயங்களை ஒரு டிரக்கில் ஏற்றி வந்து புதிய சொகுசு எஸ்யூவி காரை வாங்கியிருக்கிறார்.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் க்ளிக் செய்து படிக்கலாம்.

6.80 லட்சம் யுவான் மதிப்புக்கு நாணயங்களாகவும், 20,000 யுவான் மதிப்புக்கு கரன்சி நோட்டுகளையும் டிரக்கில் ஏற்றி அந்த டீலர்ஷிப்புக்கு கொண்டு வந்துள்ளார். அதன் மொத்த எடை 4 டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயங்களை 1,320 பண்டல்களாக அழகாக பேப்பரில் சுற்றி, அடுக்கி எடுத்து வந்துள்ளார்.

நாணயங்கள் சுற்றப்பட்ட காகித சுருள்களை 10 ஊழியர்கள் சேர்ந்து மிகவும் பத்திரமாகவும், கவனமாகவும் டிரக்கிலிருந்து இறக்கி டீலர்ஷிப்பில் உள்ள அறையில் அடுக்கினர். அதனை டிரக்கிலிருந்து இறக்குவதற்கு செய்வதற்கு 10 மணிநேரம் வரை பிடித்ததாக, டீலர்ஷிப் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தான் வேலைபார்க்கும் ஊரகப் பகுதி என்பதால் அருகில் வங்கிகள் எதுவும் இல்லை என்றும், அதனால், இந்த நாணயங்களை மாற்ற இயலாமல் சேர்த்து வைத்ததாகவும் கூறினார். மேலும், வேறு வழியில்லாமல், நேரடியாக டீலர்ஷிப்பிடம் தந்து காரை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

டீலர்ஷிப்பில் உள்ள அறையில் 4 மீட்டர் உயரத்திற்கு கேன் கொடுத்த நாணய சுருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனை வங்கியில் செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படியில்லையெனில், ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுக்க இயலும் என மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

சேமிப்பு பழக்கத்திற்கு இது நல்ல ஊதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கடந்த மாதம் குறைவான மதிப்புடைய கரன்சி நோட்டுகளை கொடுத்து, அதே சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இது மாதிரி நம்மூர் டீலர்ஷிப்புக்கு போனால், ஏற்றுக் கொள்வார்களா? உன் டீலே வேண்டாம் என்று கூறி, கை எடுத்து கும்பிடு போட்டுவிடுவார்கள்.Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES