போலீசாரிடம் இருந்து தப்பி வீட்டு கூரையில் ஏறி மிரட்டிய கைதி!


நாகர்கோவில்: நீதிமன்ற வாளகத்தில் இருந்து தப்பிய கைதி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடசேரி சிஹெச் சாலை சிவன் கோவில் தெருவை சேர்நதவர் மணிகண்டன். இவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது நீதிமன்ற சாலை அபி தெருவை சேர்ந்த அஜித் என்பவர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வடசேரி போலீசார் அஜித் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அவரை நாகர்கோவில் ஜூடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை நாகர்கோவில் சிறைக்கு கொண்டு செல்வதற்காக ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது யாரும் எதிர்பாரா வகையில் அஜீத் அங்கிருநது தப்பி ஓடினார்.

இதுகுறித்து போலீசார் உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். நீதிமன்ற வாளகத்தை சுற்றி உள்ள தெருக்களில சோதனை நடைபெற்றது. அப்போது ஒரு வீட்டின் கூரையில் அஜித் ஏறி உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது. போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டின் மேற்கூரையில் ஏறி போலீசார் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தன்னை அடிக்க கூடாது என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு கீழே இறங்கிய அஜித்தை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வாளகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES