பாகுபலி ஒரு நேரடித் தமிழ்ப் படம்!


என்னதான் ட்ரைலர் பார்த்து வியந்து பாராட்டினாலும், சிலருக்கு.. ஏன் பெரும்பாலானோருக்கு பாகுபலி ஒரு தெலுங்கு டப்பிங் படம்தானே என்ற நினைப்பு இருக்கிறது.

அப்படி ஒரு நினைப்போடு இதைப் படிப்பவர்கள், இந்த கணமே அதைத் தூக்கியெறியுங்கள்.

பாகுபலி ஒரு நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு வசனக் காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்காகவும் இரு முறை எடுத்திருக்கிறார் எஸ் எஸ் ராஜமவுலி.

தமிழ் வடிவம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் மெனக்கெட்ட விதத்தை நடிகர் சத்யராஜ் இப்படி விவரித்தார், நேற்றைய பாகுபலி முன்னோட்டப் பட வெளியீட்டு விழாவில்.

"தயவுசெய்து, பாகுபலி ஒரு டப்பிங் படம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அது ராஜமவுலியின் உழைப்பை அவமதிப்பதற்கு சமம். இந்தப் படம் ஒரு நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு வசனத்தையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாகப் பேசி நடித்தோம்.

தெலுங்கை விட தமிழ் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதில் ராஜமவுலி அத்தனை அக்கறை காட்டினார். சில காட்சிகளில் தமிழ் வசனங்கள் இப்படித்தான் வரவேண்டும் என வசனம் எழுதிய மதன் கார்க்கியிடம் கேட்டுப் பெற்றார்.

ராணாவும் பிரபாஸும் தமிழில் பேசி நடித்த படம் இது. எனவே பாகுபலி தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்க வந்திருக்கும் படம்.

இந்தப் படத்துக்கு இணையாக ஒரு படம் இனிமேல்தான் தமிழிலும் தெலுங்கிலும் வரவேண்டும். அப்படி ஒரு மகத்தான உருவாக்கம் பாகுபலி. எஸ்எஸ் ராஜமவுலி தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திவிட்டார்," என்றார்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES