தனுசின் காக்காமுட்டையைக் கைப்பற்றிய விஜய் டிவி


சென்னை: தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ‘காக்கா முட்டை' படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுசின் காக்காமுட்டையைக் கைப்பற்றிய விஜய் டிவி 250sa50

படம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது. எந்த ஒரு பிரபல நடிகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்காமல், சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தச் சிறிய படத்துக்கு இந்த வசூல் கிடைத்திருப்பது பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.

ட்விட்டரில் உள்ள சினிமா விமரிசகர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒரே குரலுடன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் இதுவரை படத்துக்கு ஒரு நெகடிவ் விமரிசனம் கூட வரவில்லை!

தமிழ்நாட்டில் 109 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பல திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் சென்னைப் புறநகர்களிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து, காக்கா முட்டை படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம், அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பார்த்த ட்விட்டர்வாசிகள் உடனே தங்கள் தரப்பு கமெண்டுகளை தட்டிவிட்டுள்ளனர். அப்போது அடுத்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் காக்கா முட்டை படத்திற்குத்தான் என்று பதிவிட்டுள்ளனர்.

விஜய் அவார்ட்ஸ் என்ன அதான் படம் ரிலீஸ் ஆகும் முன்னதாகவே சர்வதேச விருதுகளையும், தேசிய விருதுகளையும் வாங்கியோச்சே என்கின்றனர் காக்கா முட்டை படத்தின் தயாரிப்பாளர்கள்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES