சிங்காரவேலனுக்கு படம் தருமுன் கவுன்சிலில் ஆலோசனை பெறவும்! - தயாரிப்பாளர் சங்கம்


சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தருக்கு இனி புதிய பட விநியோகத்தைத் தருவதற்கு முன் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், சங்கத்தை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

லிங்கா படம் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். லிங்கா படம் நஷ்டம் என்று நஷ்ட ஈடு கேட்டார். ரஜினிக்கு வயதாகிவிட்டது, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றார். ரஜினியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதுடன், மேலும் ரூ 15 கோடி வேண்டும் என்று கேட்டு வருகிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு மீதும் பல்வேறு புகார்களைக் கூறிவருகிறார்.

லிங்காவுக்குப் பிறகு இவர் வெளியிட்ட கங்காரு படத்தை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கியதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகார் கூறி வருகிறார். இதற்காக கோடிக்கணக்கில் சிங்கார வேலனிடம் நஷ்ட ஈடும் கோரி வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அதன் பிறகு இவர் வெளியிட்ட புறம்போக்கு, திறந்திடு சீசே படங்களிலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டக் கணக்குதான் காட்டியுள்ளதாக கலைப்புலி தாணு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் கூறி வருவதாகக் கூறி சிங்காரவேலன் மற்றும் அவருக்குத் துணை போவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்தது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் இதனைத் தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி சிவா மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சங்க உறுப்பினர்களுக்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும், தங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களின் விநியோகம் தொடர்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலனுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு முன், அங்கத்தினர்கள் நம் சங்கத்தை அணுகி ஆலோசனை பெற்ற பின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்காரவேலனுக்கு கிட்டத்தட்ட ரெட் எனப்படும் தடை விதிக்கப்பட்ட மாதிரிதான் இந்த சுற்றறிக்கை என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES