பிரபஞ்சத்தின் அழிவு எவ்வாறாக இருக்கும் - ஆராய்ச்சியாளர்களின் கூற்று


தமிழ் எஞ்சின்
இவ்வுலகில் மட்டுமல்ல, நமது பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், கோள்களுக்கும் கூட ஓர் முடிவு அல்லது அழிவு என்பது அதன் தோற்றத்தின் போதே நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், பல வினோதங்களை கொண்டிருக்கும், நமது வாழ்வியலின் கருவாக இருக்கும் பிரபஞ்சத்திற்கும் அழிவு என்பது இருக்குமா? நமது சூரியக் குடும்பத்தைப் போலவே பல சூரிய குடும்பங்கள் நமது பால் வெளியில் இருக்கின்றன. அது போன்று பல கோடி பால் வெளிகளைக் கொண்டுள்ளது தான் நமது பிரபஞ்சம்.

பிரபஞ்சத்தின் தோன்றுதலை தான், நம்மையும் மிஞ்சிய சக்தி ஏதோ இருக்கிறது என கருதி வருகிறோம். அது தான் கடவுள் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், அதற்கும் அழிவு இருக்குமா என்பது தான் கேள்வி. ஒருவேளை, நமது பிரபஞ்சத்தைப் போலவே பல பிரபஞ்சங்கள் இருந்தால்? அதை நாம் கண்டறியாமல் இருந்திருந்தால்?

இவ்வாறு பல கேள்விகள் மிக நீளமாக எழுந்துக் கொண்டே தான் இருக்கின்றது பிரபஞ்சத்தைப் பற்றி பேச்சை தொடங்கும் போதெல்லாம். இனி, நமது ஆராய்ச்சியாளர்கள், நமது பிரபஞ்சத்தின் அழிவு எவ்வாறு இருக்கும் என்று கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்...

இதுவரை சில அறிவியல் அறிஞர்கள் பிரபஞ்சத்தின் அழிவு எவ்வாறு அமையலாம் என்று சில கூற்றுகளும், தியரியையும் கூறியுள்ளனர். அவை, பெரிய உறைவு (big freeze); பெரிய உடைவு (big crunch); பெரிய உதறல் (big rip); வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை (vacum metastability); வெப்ப இறப்பு (heat death)

முதலில் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள், பிரபஞ்சத்தில் ஓர் பெரிய கடுமையான குளிர் நிலவும், அந்த குளிரினால் பிரபஞ்சம் மொத்தமும் உறைந்துபோய் ஓர் அழிவை சந்திக்கும் என்று கூறினார். பெரும்பாலானோர் இதை நம்பவும் செய்தனர். இதை தான் பெரிய உறைவு என்று கூறி வந்தனர்.

ஆனால், அவர்கள் கூறிய அந்த பெரிய உறைவு என்பது நீண்ட காலம் கழித்தே நடக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். அதாவது 6-10 பில்லியன் ஆண்டுகள் கழித்து அவ்வாறான ஓர் நிகழ்வு ஏற்படலாம் என்று அவர்கள் கருதினர்.

மற்றும் ஒரு சில அறிஞர்கள், கோள்களின் எரிபொருள் தீர்ந்து அவை வெறும் இருள் மண்டலங்களாய் மாறி ஓர் இருள் அழிவு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது. ஹாவ்கிங் கதிர்வீச்சு விதப்படி, கருத் துளைகளும், கேலக்ஸியும் ஆவியாக தொடங்கும், இதன் விளைவாக, லெப்டோன் மற்றும் போட்டோன் ஆகிய நிறையற்ற துணிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ள சடப் பொருளாக பிரபஞ்சம் காணப்படும் என்றும் கூறப்பட்டது.

இன்றிலிருந்து 100 பில்லியன் வருடங்களுக்கு பின்னர் பெரிய உடைவு எனும் அழிவை பிரபஞ்சம் எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகின்றது. அதாவது வேகம் அதிகரித்து பிரபஞ்சம் விரிவடைய காரணமாக உள்ள டார்க் எனெர்ஜி எனும் கருஞ்சக்தி ஒரு கட்டத்தில் நின்று மறு பக்கம் திரும்பும் எனவும் இதனால் பிரபஞ்சம் சுருங்கி சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும் இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

பிக் ரிப் எனப்படுவது, ஓர் நிலையில் நமது பிரபஞ்சம் மிக வேகமாக பெரிதாக விரிவடைந்து, ஈர்ப்பு சக்தி இழந்து ஒன்றுமில்லாததாக மாறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த கூற்றின் படி, பிரபஞ்சத்தில் எந்த நட்சத்திரமும், கோள்களும் எஞ்சாமல் அனைத்தும் அழிந்துவிடும் என்றும், இது நடக்க 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறு உலகம் அழிய பல வழிகளை பலர் கூறி வந்தாலும். சிலர், பிரபஞ்சத்திற்கு அழிவே கிடையாது. எப்படி உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறையினும். உலகம் நிலையாக இருக்கிறதோ. அவ்வாறு, பிரபஞ்சத்தில் பல கோள்களும், நட்சத்திரங்களும் தோன்றி மறையினும் பிரபஞ்சம் அழியாது என்று கூறுகின்றனர்.

எப்படி உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறையினும். உலகம் நிலையாக இருக்கிறதோ. அவ்வாறு, பிரபஞ்சத்தில் பல கோள்களும், நட்சத்திரங்களும் தோன்றி மறையினும் பிரபஞ்சம் அழியாது என்று கூறுகின்றனர்.

பல கோள்களை கொண்ட நட்சத்திரம் (சூரியன் - சூரியக் குடும்பம்), பல சூரியக் குடும்பங்களை கொண்டுள்ள கேலக்ஸி, பல கேலக்ஸிகளை கொண்டுள்ள பால்வெளி மண்டலம், பல பால்வெளி மண்டலங்களை கொண்டுள்ள பிரபஞ்சம் என இருக்க. இதற்கு அடுத்து, பல பிராஞ்சம் இருக்குமாயின், நமது பிரபஞ்சத்திற்கும் அழிவு சாத்தியமாக இருக்கலாம்.

நமது மனிதர்கள் நேற்று நடந்ததை மறந்துவிடுவார்கள், நாளை என்ன நடக்கும் என்பதை யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்கவே மாட்டார்கள். இன்னும் பல பில்லியன் ஆண்டுகள் கழித்து நடக்கலாம் என யூகிக்கப்படும் பிரபஞ்சத்தின் அழிவை பற்றி யோசிக்கும் நாம், அன்று நாம் இருக்க போவது இல்லை என்பதை மறந்துவிட்டோம். ஏனெனில், அதற்கு முன்பே நமது சூரியக் குடும்பம் அழிந்துவிடும் என்பதும் நமது ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது தான்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES