அமெரிக்காவில் படம் எடுத்தால் அது ஹாலிவுட், இந்தியாவில் இருந்து படம் எடுத்தால் அது பாலிவுட் என்ற பார்வை வெளி உலக மக்களிடம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் தென்னிந்தியா படங்களின் மவுசு வெளிநாடுகளில் கூடியுள்ளது. இப்படியாக நம் நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருந்தாலும் கூட, வெளி நாட்டவர்கள் பலர் இந்தியா பற்றிய சில உண்மை விவரங்கள் அறியாமல் தவறானவற்றை உண்மை என்று கருதி ஏமார்ந்து வருகிறார்கள். அப்படி இந்தியாவை பற்றி உலக மக்கள் அறிந்திராத பத்து பெரும் உண்மைகள் குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம். வரும் 2028ல் இந்தியா சீனாவை முந்தி உலகளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என ஐநா சொல்கிறது. அதாகப்பட்டது, இன்னும் 10 வருடத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 1.45 பில்லியனாக உயரும் வாய்ப்புகள் உண்டு.
இதுமட்டுமல்ல, 2060களில் இந்தியாவின் மக்கள் தொகை 1.6 பில்லியனாக உயரலாம் என்றும். இந்த நூற்றாண்டின் முடிவில் இது 1.5 பில்லியனாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐநாவின் கூற்றின் படி 2060களில் மக்கள் தொகையில் சீனாவை முந்தி இரண்டாம் இடத்திற்கு நைஜீரியா முன்னேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு தீபகற்பம் (Peninsula) என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசார் உலாவி வந்த காலத்தில் இந்தியா ஒரு தீவாக இருந்ததாம். அதுவும் பெரிய அளவிலான தீவாக. அப்போது இருந்த கோண்டுவானா (Gondwanaland) எனும் பண்டையக் காலத்து சூப்பர் காண்டினென்ட்டில் இருந்து உடைந்து வந்தது தான் இந்தியா என்று கூறுகிறார்கள். ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் பிளேட்டானது ஆசியாவுடன் மோதி இணைய துவங்கியதாம். இதன் தாக்கத்தால் தான் இமாலய மலையானது ஆண்டுக்கு ஆண்டு உயரந்து உலகின் உயர்ந்த மலையானது என்றும் கூறப்படுகிறது.
உலகெங்கிலும் இந்தியாவில் இந்தி, மராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமே பேசுவதாக அறிந்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 1961ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ்-ல் 1651 மொழிகள் பேச்சு வழக்கில் இருப்பது தெரியவந்தது. இதில் சிலவன ஒரே மொழியின் வேறுப்பட்ட பேச்சு வழக்காகவும் இருந்து வந்தன. இவற்றுள் இந்தி, பெங்காலி, தெலுங்கு, மாத்தி, தமிழ் மற்றும் உருது போன்ற ஆறு மொழிகள் மட்டுமே ஐம்பது மில்லியன் மக்களால் பேசப்பட்டு வந்தன. ஆகவே இதை இந்தியாவின் பெரு மொழிகள் என்று வர்ணிக்கப்பட்டன. மேலும் 120 இருபது மொழிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்பட்டு வருகிறது.
இதில் நாம் முக்கியமாக குறிப்பிட வேண்டிய உண்மை யாதெனில், இந்தியாவிற்கு தேசிய மொழி என்று கிடையாது. சிலர் தவறாக இந்தியை தேசிய மொழி என்று கருதுகிறார்கள். சிலர் தவறாக இந்தி தேசிய மொழி என்று கூறி பரப்புகிறார்கள். இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் உட்பட சில மொழிகள் அதிகார மொழியாக உள்ளன.
உலகின் டாப் டென் மாநகரங்களில் இந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இது சீனாவை காட்டிலும் எண்ணிக்கையில் ஒன்று கூறுதல் ஆகும். ஐநாவின் தகவல் படி புது தில்லி உலக அளவில் இரண்டாவது இடத்தையும், மும்பை ஏழாவது இடத்தையும், கல்கட்டா பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
17ம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்டிருந்த நகராக விளங்கியது டில்லி. அப்போது டில்லி டாப் முப்பது பட்டியலில் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் டெல்லியில் ஏழு இலட்சம் பேர் கூடுதலாக இடம் பெயர்கிறார்கள் என்ற தகவலும் அறியப்படுகிறது. இந்த கூடுதல் மக்கள் நெரிசல் காரணமாக புது தில்லியில் தண்ணீர் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. புது தில்லி, மும்பை, கல்கத்தா போக, இந்தியாவின் சென்னை, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், புனே மற்றும் சூரத் போன்ற நகரங்கள் ஐநாவின் டாப் நூறு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகின் மிகப்பெரிய டெமாக்ரடிக் நாடு இந்தியா தான். கடந்த 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின் போது இந்தியாவில் மொத்தம் 417,037,606 என்ற எண்ணிக்கையில் வாக்குபதிவு ஆகியிருந்தது. இது உலகிலேயே மாபெரும் வாக்குப்பதிவு ஆகும். இதுவுமே கூட இந்தியாவில் இருக்கும் வாக்காளர்களில் 60% தான் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 830,866 வாக்குச்சாவடிகள் உள்ளன. குஜராத்தின் மேற்கு பகுதியில் ஒரே, ஒரு வாக்காளருக்காக ஒரு சாவடி இருந்து வந்தது. அவர் அங்கே இருக்கும் ஒரு கோயிலை பாதுகாத்து வருகிறார் என்று அறியப்படுகிறது.
சிலர் இந்தியா ஒரு இந்துக்கள் நாடு என்று ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். ஆனால், அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கும் இடத்தில் உலகின் மூன்றாவது நாடாக இருந்து வருகிறது இந்தியா. இந்தியாவில் 15% பேர் இஸ்லாமியர்கள். காஸ்மீர் மற்றும் லக்ஷதீப் போன்ற இடங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
உலக அளவில் கணக்கெடுத்து பார்கையில் அதிகமான சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் மரண எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள். சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 37% பேர் பாதசாரிகள். அதாவது வாகனம் ஒட்டாமல், சாலையில் நடந்து செல்பவர்கள். இந்தியாவில் இத்தனை சாலை விபத்து நடக்க 55% காரணமாக இருப்பது மோசமான சாலை வசதிகள் ஆகும்.
அமெரிக்காவில் படம் எடுத்தால் அது ஹாலிவுட், இந்தியாவில் இருந்து படம் எடுத்தால் அது பாலிவுட் என்று வெளி உலக மக்கள் தவறாக கருதுகிறார்கள். இந்தியாவில் பழமொழி திரைப்படங்கள் வெளியாகின்றன. ஒரு வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் 200க்கும் குறைவான படங்கள் தான் பாலிவுட்டில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு மொழி படங்கள் மட்டும் 500 என்ற எண்ணிக்கையில் வெளியாகின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான், யு.கே மற்றும் பிரான்ஸ்க்கு அடுத்து உலக பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
உலகிலேயே அதிகமாக மாங்கனிகள் தயாரிப்பவர்கள், உட்கொள்பவர்கள் என்ற வகையில் முதல் இடத்தை பெற்றுள்ளது இந்தியா. ஒவ்வொரு கோடை காலத்திலும் இந்தியாவில் மாம்பழத்திற்கு மவுசு கூடிவிடும். இந்தியாவில் தான் நூற்றுக்கணக்கான மாங்கனி வகைகள் இருக்கின்றன. மேலும், முப்பதுக்கும் மேற்பட்ட வகைகளான மாங்கனிகள் சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் எது சிறந்த சுவையான மாம்பழம் என்று குறிப்பிடுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆயினும் அல்போன்சா மாம்பழம் உலக அளவில் பெரும் ஈர்ப்பு பெற்றுள்ளது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மாங்காய் எண்ணிக்கையில் 40% இந்தியாவில் இருந்து விளைகிறது. இந்தியாவிற்கு அடுத்த இடங்களில் சீனா, தாய்லாந்து மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகள் இருக்கின்றன.
உலக சாதனைகள் செய்வோர் பட்டியலிலும் இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கின்னஸ் சாதனையின் தகவல் படி வருடா வருடம் இந்தியர்கள் அதிக சாதனைகள் புரிவது அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.