அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்?


தமிழ் எஞ்சின்
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்? 14-1513226069-5

உடலை சீராக பராமரிக்க வேண்டுமெனில் தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று.போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படியில்லை எனில் அது டீ ஹைட்ரேசன் ஆகிடும் அது மிகவும் ஆபத்தானது என்று தினமும் எச்சரிக்கப்படுவதை நாம் எல்லாரும் கடந்து வந்திருப்போம்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதினால் ஏற்படுகிற பிரச்சனைகளை இரண்டு முக்கிய வகைகளாக பிரித்திருக்கிறார்கள். கிட்னியிலிருந்து தான் உடலில் தேவையற்ற நீர் சிறு நீராக வெளியேற்ற பிரிக்கப்படுகிறது. அப்படி வெளியேற்றப்படுகிற நீரைக் காட்டிலும் நீங்கள் தொடர்ந்து அதிகமாக நீரை குடிக்கும் பட்சத்தில் அவை உங்கள் ரத்த நாளத்தில் அதிகளவு தண்ணீர் சேர்த்திடும்

தண்ணீரை சரியாக வெளியேற்றப்படவில்லை எனில் அவை பல்வேறு உடல் உபாதைகளை நமக்கு ஏற்படுத்திடும். சில நேரங்களில் நம் உடலில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதுவும் நமக்கு நல்லதல்ல.
இது நம் உடலில் இருக்கிற பிற சத்துக்களின் அளவை திடீரென குறைத்திடும்.

உங்களது வயது, பாலினம்,நீங்கள் வசிக்கும் இடத்தின் தட்பவெட்ப சூழ்நிலை, உடல்நிலை, நீங்கள் செயல்படுகிற விதம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தான் உங்களது தண்ணீர் தேவை நிர்ணயிக்கப்படுகிறது.
சில தவிர்க்க முடியாத நேரங்களில் காய்ச்சல் இருக்கும் போது, அதீத வெயில் காலத்தில், உடல் உழைப்பு அதிகமாக செய்யும் போது அதிகமான தண்ணீரைக்குடிக்க வேண்டும்.

உங்களது சிறுநீரின் நிறத்தை வைத்தே நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடித்திருக்கிறீர்களா அல்லது அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறீர்களா என்று கண்டுபிடிக்க முடியும்.
இளம் மஞ்சள் இருந்தால் அது நார்மல். அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலில் தண்ணீர் தேவை அதிகமிருக்கிறது என்று அர்த்தம். இதே வெள்ளையாக வெளியேறினால் நீங்கள் அளவுக்கு அதிகமான தண்ணீரை குடித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அறிகுறி 1:

தண்ணீர் தாகம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு ஒரு முறையென தண்ணீர் குடித்துக் கொண்டேயிருப்பீர்கள். எங்கே வெளியில் கிளம்பினாலும் கையில் ஒரு வாட்டர் பாட்டில் இருக்கும்.
நம் உடலில் ஏற்படுகிற டீ ஹைட்ரேஷனை நம் உடல் சமாளிக்கும் வகையில் தான் அமைந்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி தண்ணீர் தாகம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் உண்டானால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அறிகுறி 2:

சிலருக்கு இரவு நேரத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றிடும். ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் உங்கள் உடலில் அதிகமாக தண்ணீர் சேர்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுங்கள். இரவு தூங்கச் செல்லும் போது ஒரு முறை சிறுநீர் கழித்துவிட்டுச் சென்றால் போதும்.

அறிகுறி 3:

குமட்டல் மற்றும் வயிறு உப்பியது போன்ற உணர்வு மேலோங்கும். நீங்கள் அளவுக்கு அதிகமான அளவு தண்ணீர் குடிக்கும் போது, கிட்னி அதனை வெளியேற்ற தடுமாறுகிறது. இதனால் அவை உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். குமட்டல் மட்டுமின்றி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு கூட ஏற்படுத்தக்கூடும்.

அறிகுறி 4:

நாள் முழுவதும் தலைவலி இருக்கும். நீங்கள் அதிகளவு தண்ணீரைக் குடித்தால் அவை உடலில் இருக்கக்கூடிய உப்பின் அளவை கனிசமாக குறைத்திடும். இதனால் உடலில் இருக்கக்கூடிய செல்கள் இருக்கிற அளவை விட சற்று பெரிதாக வீங்கத் துவங்கிடும்.
இதனால் மூளையும் அளவு பெரிதாகவாதல் அவை தலைவலியை உண்டாக்குகிறது. சிலருக்கு இது மிகத் தீவிரமான பிரச்சனைகளை கூட உண்டாக்கும்.

அறிகுறி 5:

சட்டென்று உடல் எடையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கைகள்,பாதங்கள், உதடு ஆகியவை வெளிறிக்காணப்படும். சிலருக்கு உடல் எடையும் கூடும்.

அறிகுறி 6:

தசைகள் வலுவிழந்து காணப்படும். அதிகப்படியான தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டின் அளவு குறையத்துவங்கும். இதனால் தசை வலி ஏற்படக்கூடும். இளநீரில் அதிகப்படியான இளக்ட்ரோலைட் இருக்கிறது. அதனைக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு இளநீர் போதுமானது.

அறிகுறி 7:

எப்போதுமே சோர்வாக உணர்வீர்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது கிட்னியின் வேலையும் அதிகரிக்கிறது. இதனால் கிட்னி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பதால் உங்கள் உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்ககூடிய ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பது போலத்தோன்றிடும்.

சோடியத்தின் அளவு:

நம் உடலில் சோடியத்தின் அளவு குறையும் பட்சத்தில் அவை உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சோடியம் தான் நம் உடலிலிருக்கும் செல்களுக்கு தகவல்களை அனுப்புகிறது. செயல்பாடுகளை நினைவூட்டுகிறது. அதன் அளவு குறையும் பட்சத்தில் எல்லா வேலையுமே குறையும்.

இதயம்:

உடலின் பிற பாகங்களுக்கு இதயம் தான் ரத்தத்தை பம்ப் செய்கிறது. நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு அதீத வேலைப்பளூவாகும். ஒருகட்டத்தில் அவை தன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள ஆரம்பிக்கும் போது பெரும் பிரச்சனை வெடிக்கும்.

கிட்னி:

ஒரு மணி நேரத்தில் ஆயிரம் மில்லி லிட்டர் அளவுள்ள தண்ணீரை மட்டுமே கிட்னி ஃபில்டர் செய்திடும். இது அதிகரிக்கும் போது கிட்னியில் இருக்கக்கூடிய Glomeruli எனும் கேப்பிலரி பெட் சேதமடைந்திடும், இவை தான் கிட்னி தண்ணீரை வடிகட்ட உதவுகிறது.

க்ளோரின்:

இன்றைக்கு பெரும்பாலானோர் ப்யூரிஃபைடு வாட்டர் என்று சொல்லி க்ளோரின் அதிகளவு சேர்க்கப்பட்டிருக்கும் தண்ணீரையே குடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நீங்கள் அளவுக்கு அதிகமாக குடித்தால் உங்கள் உடலில் அதிகளவு க்ளோரின் சேர்ந்திடும். இது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

என்ன தீர்வு:

முதலில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெற்றிடுங்கள். அதிகளவு தண்ணீர் குடித்ததால் தான் இந்தப்பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்று அறிந்து கொள்ளுங்கள். அதிகளவு தண்ணீர் குடிப்பதை முதலில் நிறுத்தங்கள் டியூரிடிக்ஸ் எடுக்கலாம். இவை சிறுநீர் அளவை அதிகப்படுத்தும். சிலருக்கு அவர்கள் எடுக்கும் மருந்துகள் கூட அதிகம் தாகம் ஏற்படுத்தும், அதனால் அவற்றை நிறுத்தலாம். சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES