2018-ஆம் ஆண்டு சனிபகவான் உங்கள் இராசிக்கு தீங்கு விளைவிப்பாரா?


தமிழ் எஞ்சின்
2018-ஆம் ஆண்டு சனிபகவான் உங்கள் இராசிக்கு தீங்கு விளைவிப்பாரா? 13-1513145941-01

கிரங்கள் ஒருவரது வாழ்க்கையில் இன்பத்தை தருவதாகவும் இருக்கலாம் அல்லது சில தடைகளை கொடுப்பதாகவும் அமையலாம். அதன் அடிப்படையில் தற்போது நடந்துள்ள ஒரு நிகழ்வுதான் இந்த சனிப்பெயர்ச்சி.

கடவுள் என்பவன் நம்மை காப்பாற்றுபவன். ஆனால் நாம் அதிகமாக பயம் ஒரு கடவுளை பார்த்து பயப்படுகிறோம் என்றால், அது சனிபகவானை பார்த்து தான். ஆனால் இவர் நமது வாழ்க்கைக்கு தீங்கை செய்யமாட்டார். நாம் செய்து வந்த நன்மைகளுக்கு கட்டாயம் அதற்குரிய பலனை கொடுப்பார். அனைவருக்குமே எதிர்காலத்தை பற்றிய கனவு என்று ஒன்றிருக்கும். பலர் இந்த வருடத்தில் இத்தனை நிறை குறைகளை சந்தித்துவிட்டோம்..! இனி அடுத்த வருடம் எப்படி இருக்க போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானது தான் இந்த பதிவு.. இந்த பகுதியில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வரப்போகிற 2018 ஆம் ஆண்டு நன்மைகளை கொடுக்குமா என்று காணலாம்.

1. மேஷம்:

நீங்கள் யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள். அதே சமயம் அதிகமான கோபமும், படபடப்பும் யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம் உடையவர்களாக இருப்பீர்கள். எதிரிகளை தேடிச் சென்று பலி தீர்க்கும் சுபாவம் உடையவர்கள். பலி தீர்க்கும் எண்ணத்தையும் கோபத்தையும் விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள். பார்க்கும் வேலையில் முன்னேற்றமும், முதலாளி ஆகும் வாய்ப்பும் கிடைக்கும். காதல் கணிந்து திருமணத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. வெளிநாடுகள் செல்லும் பாக்கியம் உள்ளது. கடன் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிட வேண்டாம். முத்த சகோதரிகளால் நன்மை உண்டாகும். நட்பு வட்டாரம் பெருகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் வெகு சிரமத்திற்கு பிறகு கிடைக்கும்.

2. ரிஷபம்:

யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள் நீங்கள். சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சற்று சுமாரான பலன் என்றே சொல்ல வேண்டும். சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பேச்சை குறைக்கவும். கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டியது அவசியம். பயணங்கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். இதனால் வேதனை தான் உண்டாகும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்புள்ளது. தயாரால் நன்மைகள் அதிகரிக்கும். புதுமனை வாங்கும் யோகம் அதிகம் உள்ளது. குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். குழந்தைகளை எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வேலையில் போட்டி, பொறாமைகள் அதிகம் வரும். பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது.

3. மிதுனம்:

பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாக இருப்பீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும். முன்பை விட வரும் வருடம் சற்று கடுமை குறைந்து காணப்படும். அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணப்புலக்கம் அதிகரிக்கும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைக்கும். காதலில் முன்னேற்றம் உண்டு. கடன், ஜாமின் கையெழுத்து போன்றவை வேண்டாம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

4. கடகம்:

ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயர்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று முயற்சி அடைந்து வெற்றி பெறப்படுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர்கள். இதுவரை போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியை அனுபவிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும் சகாயமாகவும் வந்து சேரும். சொத்துக்கள், நகைகள் போன்றவை வாங்குவீர்கள். புதிய தொழில்களை தொடங்கலாம்.. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

5. சிம்மம்:

நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள். சில சமயம் அறிவுடன், ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆனால் சில சமயம் மறதியும், கவச்சிதறலும் இருக்கும். தீர்க்க முடியாத நோய்கள் மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்யம் காணப்படும்.
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். காரியங்களை தள்ளிப்போட கூடாது. சோர்வடையாமல் முயற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

6. கன்னி:

எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கிடைத்த வேலையை முழுமனதுடன் செய்ய வேண்டும். பேச்சில் சாமர்த்தியமும் அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். சுறுசுறுப்பும் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

7. துலாம்:

நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவராக இருப்பீர்கள். இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும். உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பயணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

8. விருச்சிகம்:

தனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்பதில் நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து தனித்தும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் திறம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வசியப்படுத்தி உங்கள் வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர்களாகத் திகழ்வீர்கள். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். சோர்வு, களைப்பு, இயலாமை போன்றவை இனி இருக்காது. அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். வீடு, மனை, வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க யோகம் உண்டு. இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும்.

9. தனுசு:

நீங்கள் தலைமை பதவி ஏற்கும் ஆற்றலும் எதிலும் உங்களை முன்னிலைபடுத்துவதிலும் முதன்மையானவர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள். செலவு செய்வதில் கணக்கு பார்க்காதவர்கள். நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் சற்று குறைந்து காணப்படும். எதையும் தைரியமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் கை கூடும்.

10. மகரம்:

மனதில் உறுதியும், உழைப்பில் நேர்மையும், செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும். எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால் நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்திற்கு வரும் புதுவரவால் நன்மைகள் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

11. கும்பம்:

தலைமைப் பணபும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களது மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். உங்களது தன்னம்பிக்கை, புகழ், கௌரவம் உயரும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். தாயின் ஆதரவால் நன்மைகள் கிடைக்கும்.
காதல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தடைபட்டு வந்த திருமணங்கள் நடக்கும். தொழில் உள்ள தடைகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். உங்களிடம் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும்.

12. மீனம்:

எப்பொழுதும் எதையும் நிதானமாக யோசித்துச் செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பும் உடையவர்கள். எதிலும் ஈடுபாட்டுடன் முனைந்து செயல்படும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்யத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள். இதுவரை இருந்து வந்த கவலைகள் மாறி உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களது முயற்சி வேகத்துடன் விவேகத்துடன் இருந்தால் எண்ணியதை எல்லாம் அடைவீர்கள். அடிக்கடி பயணங்கள் உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகள் வந்து விலகும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை இருந்து வரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES