இந்த வருடத்தின் சிறந்த ஆங்கில வார்த்தை பெமினிசம்... மெரியம்-வெப்ஸ்டர் அகராதி அறிவித்தது!


தமிழ் எஞ்சின்
நியூயார்க்: இந்த வருடத்தின் சிறந்த ஆங்கில வார்த்தையாக 'பெமினிசம்' தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை பிரபல ஆங்கில அகராதி 'மெரியம்-வெப்ஸ்டர்' வெளியிட்டது. பல்வேறு காரணங்களுக்காக இந்த வார்த்தை சிறந்த ஆங்கில வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இதனுடன் சேர்த்து இன்னும் இரண்டு வார்த்தைகள் 'சிறந்த வார்த்தை' என்று கூறப்பட்டு இருக்கிறது.
முதல் இடத்தில் பெமினிசம் என்ற வார்த்தை இருக்கிறது. சிறந்த வார்த்தையாக கூறப்பட்ட அனைத்திற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கன்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலத்தில் தற்போது இருக்கும் சிறந்த அகராதிகளில் ஒன்று மெரியம்-வெப்ஸ்டர் அகராதி. இதை இணையத்திலும் எளிதாக தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனாகவும் இதை படிக்க முடியும். இந்த அகராதி வருடாவருடம் சிறந்த ஆங்கில வார்த்தையை தேர்ந்தெடுக்கும். அந்த வருடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட முக்கியமான வார்த்தையை சிறந்த வார்த்தையாக இந்த அகராதி தேர்வு செய்யும்.

இந்த வருடத்தின் சிறந்த வார்த்தையாக பெமினிசம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. சென்ற வருடத்தை விட அதிக அளவில் பெமினிசம் இணையத்தில் தேடப்பட்டு இருக்கிறது. அதேபோல் 70 சதவிதம் பேர் இணையத்தில் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். மேலும் இந்த வருடத்தில் அதிக முறை டிரெண்ட் ஆன வார்த்தையும் இதுதான் என்று கூறப்படுகிறது.

2017ல் இந்த வார்த்தை வைரல் ஆனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. 'மீ டூ' என்று ஆங்கிலத்தில் டேக் உருவாக்கப்பட்டு பெண்கள் தங்கள் துன்பங்களை வெளியிட்டார்கள். அமெரிக்காவில் அடிக்கடி பெண்கள் பெமினிசம் என்று வார்த்தையை பயன்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். மேலும் பலர் அமெரிக்க அதிபருக்கு எதிராக இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த வார்த்தை இவ்வளவு வைரல் ஆகியுள்ளது.

ஆங்கிலத்தில் இருக்கும் 'காம்ப்ளிஸிட்' என்ற வார்த்தையும், 'டோடார்ட்' என்ற வார்த்தையும் கூட சிறந்த வார்த்தை என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த காம்ப்ளிஸிட் வார்த்தையை அதிகம் பயன்படுத்தியது டிரம்ப்பும், இவாங்கா டிரம்ப்பும் தான். அதேபோல் டோடார்ட் வார்த்தையை டிரம்ப்பும், வட கோரிய அதிபர் கிம் ஜோங்கும் பயன்படுத்தி இருக்கின்றனர்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES