எஸ்பிஐ வங்கி கிளைகளில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்!


தமிழ் எஞ்சின்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கியானது அன்மையில் தனது 1200 வங்கி கிளைகளில் பெயர், குறியீடுகள் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு போன்றவற்றில் துணை வங்கிகள் இணைவிற்குப் பிறகு மாற்றங்களைச் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கி இதற்கான முழுப் பட்டியலை தனது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் இங்குப் பார்க்கலாம்

மும்பை, டெல்லி, பெங்களூரு, சண்டிகர், அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பாட்னா மற்றும் போப்பால் போன்ற முக்கிய நகரங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல முக்கிய எஸ்பிஐ வங்கி கிளைகளின் பெயர், குறியீடுகள் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு போன்றவற்றினை மாற்றியுள்ளது.

அதே போன்று டெல்லியைச் சேர்ந்த ஐஎப்சிஐ டவர் கிளைப் பெயர் நேரு பேலஸ் கிளை என்றும் கிளை குறியீடு 32602-ல் இருந்து 04688 என்றும் மாற்றப்பட்டுள்ளது.

இந்திய நிதி அமைப்பு குறியீடு என்பதன் சுருக்கமே ஐஎப்எஸ்சி குறியீடு ஆகும்.
ஐஎப்எஸ்சி குறியீடானது வங்கியின் கிளைக்கான ஒரு எண் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட குறியீடாகும். இது மின்னணு பரிமாற்றத்திற்கு தேவைப்படும். ஒவ்வொரு வங்கி கிளைக்கும் வெவ்வேறு ஐஎப்எஸ்சி குறியீடு உள்ளது. இந்த குறியீடுகளை ஆர்பிஐ வங்கிகளுக்கு அளிக்கிறது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES