நடு ரோட்டில் திடீர் பள்ளம், சென்னையில் பரபரப்பு!!


சென்னை: சென்னை அரசு நர்சிங் கல்லூரி விடுதி முன்பு நடுச் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டம் வந்தது முதல் சென்னையில் பல சிக்கல்கள். ஆங்காங்கே வீடுகளில் திடீர் விரிசல், உள்ளே இறங்கிப் போவது என சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பயணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகளில் பள்ளம் ஏற்படுவதும் அவ்வப்போது அரங்கேறுகிறது. இந்த நிலையில் இன்றும் அதேபோன்ற பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அரசு நர்சிங் கல்லூரி விடுதி முன்பு இன்று காலையில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அப்போது அந்த வழியாக போன கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் பீதியடைந்தனர்.
நடு ரோட்டில் திடீர் பள்ளம், சென்னையில் பரபரப்பு!! 3130fbd

நடு ரோட்டில் திடீர் பள்ளம், சென்னையில் பரபரப்பு!! 2hnriw0


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES