யாகாவாராயினும் நாகாக்க - விமர்சனம்


தமிழ் எஞ்சின்
சென்னை: ஒரு மனிதன் பேசும் சொற்களை யோசித்துப் பேச வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் படம், இன்று இந்தப் படத்துடன் சேர்ந்து மொத்தம் 5 படங்கள் திரைக்கு வந்துள்ளன.

இதில் யாகாவாராயினும் நாகாக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இன்று வெளியாகியுள்ளது.

யாகாவாராயினும் நாகாக்க படத்தின் மேலுள்ள நம்பிக்கையால் மற்ற படங்களுடன் சேர்த்து இதனை வெளியிட்டதற்கு படம் கைமேல் பலனைக் கொடுத்துள்ளது.

ஆதியின் மார்க்கெட் சரிந்திருக்கும் இந்த நேரத்தில் அதனைத் தூக்கி நிறுத்த மிகவும் மெனக்கெட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கின்றனர் ஆதியின் அண்ணன் சத்ய பிரபாஸ் பினிஷெட்டியும் (இயக்குநர்) மற்றும் தயாரிப்பாளர் ரவி ராஜா பினிஷெட்டியும் (ஆதியின் அப்பா).

மும்பையில் ஆதி துப்பாக்கி ஒன்றை வாங்குவது போல, படம் ஆரம்பிக்கிறது. அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்று அவர் வாயாலேயே சொல்ல ஆரம்பிக்க கதை ஸ்டார்ட்.

யாகாவாராயினும் நாகாக்க - விமர்சனம் 1265gyo

நாவடக்கம் தேவை இதுதான் படத்தின் ஒருவரிக் கதை. உயிருக்கு உயிரான நண்பர்கள் , அழகான காதலி என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிக்கு நண்பர்கள் ரூபத்தில் வருகிறது ஆபத்து. புத்தாண்டு தினத்தில் ஆதியின் நண்பர்களில் ஒருவன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ரிச்சாவிடம் சென்று, தகராறு செய்ய அந்தப் பிரச்சினையானது பயங்கரமாக வெடித்து ஆதி சம்பந்தப்பட்ட அனைவரையும் உயிருக்குப் பயந்து ஓடவைக்கிறது. அப்படி என்ன பிரச்சினை, ஏன் எல்லோரும் ஓடுகின்றனர் என்பதை ஆக்சன் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சத்யபிரபாஸ் பினிஷெட்டி.

மிருகம், அரவாண், ஈரம் படங்களைத் தொடர்ந்து ஆதியின் நடிப்பில் வந்திருக்கும் யாகாவாராயினும் நாகாக்க படம், ஆதியின் சரிந்திருக்கும் மார்க்கெட்டை கண்டிப்பாக தூக்கி நிறுத்தும் என்று நம்பலாம். வழக்கம் போல எல்லாத் தமிழ் சினிமாக்களிலும் வருகின்ற பாத்திரங்கள் தான், மிடில்கிளாஸ் பையன், அம்மா செல்லம், ஒரு அக்கா மூன்று பணக்கார நண்பர்கள் மற்றும் ஒரு அழகான காதலி இவற்றுடன் தெண்டச்சோறு என்று கத்தும் அப்பா. வேலை வெட்டி இல்லாமல் சிக்ஸ்பேக் வைத்து சுத்துவது, கணீர்க் குரலில் பேசுவது, பிரச்சினையைக் கண்டு ஓடுவது, காதலிப்பது என எல்லாமே பக்காவாக அமைந்ததில் நீண்ட காலம் கழித்து ஹீரோவாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஆதி.

டார்லிங் நிக்கி கல்ராணிக்கு நடிப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பு ராயல் என்பீல்ட் வண்டியை அசால்ட்டாக ஓட்டுவது, டாஸ்மாக்கிற்கு சென்று பீர் வாங்குவது, ஆதியை கலாய்ப்பது, என்ன ஏது என்று தெரியாமலேயே உயிருக்குப் பயந்து ஓடுவது என்று படம் முழுக்க ஜாலிக்கோழியாக வலம் வந்திருக்கு பொண்ணு.

ஒருத்தனக் காப்பாத்த, இன்னொருத்தரு உயிரைக் கொடுக்க நினைக்கிற நீங்க இதெல்லாம் கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டீங்க வேற யாரு சொல்லுங்க, அலட்டாமல் மிரட்டும் வில்லன் முதலியாராக மிதுன் சக்கரவர்த்தி. நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ப்ரசன் ப்ரவீன் ஷ்யாம்(எல்லோர் பேரும் நீளமாவே இருக்கே ) இசையில் பின்னணி அதிரடி இசை ஓகே பாடல்களில் சோக்கான மற்றும் பப்பரப்பாம் போன்ற இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவை எல்லாம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடுகின்றன.

நல்ல கதை, யூகிக்க முடியாத திரைக்கதை அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் என்று நல்ல ஒரு கதையைக் கொடுத்திருந்தாலும் கூட, ஒவ்வொரு சீனும் இவ்ளோ நீளமாவா வைக்கிறது. இயக்குனரோட பேர் மாதிரி ஒவ்வொரு சீனும் அனுமார் வாலா நீளுது, இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தா படம் நச்சுன்னு நங்கூரமா ரசிகர்கள் மனசில நின்னுருக்கும். இருந்தாலும் நாவடக்கம் தேவை என்று இப்படி ஒரு நல்ல கருத்தைச் சொன்னதற்காக வாழ்த்துக்கள் சார்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES