ஏபிசிடி 2 படத்தை விளம்பரப்படுத்தும் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர்


டெல்லி: ஏபிசிடி 2 படத்தை விளம்பரப்படுத்த டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஷ்ரத்தா கபூர் ஸ்டிராப்லெஸ் கவுனில் படுகவர்ச்சியாக வந்திருந்தார்.

ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படம் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. ஏபிசிடி 2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஏபிசிடி 2 நாளை ரிலீஸாக உள்ளது.

ஏபிசிடி 2 படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர், ரெமோ டிசோசா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். படத்தின் வேலைகளை முடித்த கையோடு பல இடங்களுக்கு சென்று அதை விளம்பரப்படுத்துவதை பாலிவுட்காரர்கள் வழக்கமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை விளம்பரப்படுத்த வருண், ஷ்ரத்தா கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு சென்றனர். அந்த நிகழ்ச்சியில் ஷ்ரத்தா மஞ்சள் நிற ஸ்டிராப்லெஸ் கவுன் அணிந்து படுகவர்ச்சியாக இருந்தார்.

கல்லூரி நிகழ்ச்சியில் வருணும், ஷ்ரத்தாவும் மாணவ, மாணவியருடன் சேர்ந்து நடனம் ஆடினர். ஷ்ரத்தாவின் கவர்ச்சியான உடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஏபிசிடி 2 படத்தில் நடிக்கையில் வருண், ஷ்ரத்தா இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சில நடன அசைவுகளை செய்யும்போது அவர்கள் காயம் அடைந்துள்ளனர். தான் கஷ்டப்பட்டு நடித்த படம் இது தான் என வருண் தெரிவித்துள்ளார்.

ஷ்ரத்தாவுக்கு இவ்வளவு நன்றாக ஆடத் தெரியும் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஏபிசிடி 2 படத்தில் அவர் அருமையாக டான்ஸ் ஆடியுள்ளார் என்று வருண் புகழ்ந்து பேசியுள்ளார்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES