தடை செய்யப்பட்ட நூடுல்சை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!


சென்னை : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ்-ல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான காரீயம் கலந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து பல மாநிலங்களில் அந்த உணவு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசும் மேகி நூடுல்ஸ்-க்கு தடை விதித்தது.
தடை செய்யப்பட்ட நூடுல்சை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!! Ehdx6q
தமிழகம் முழுவதும் 65 இடங்களில் மேகி நூடுல்ஸ் மற்றும் பல கம்பெனி தயாரிப்பு நூடுல்ஸ்களின் மாதிரிகளை வாங்கி சோதனை செய்யப்பட்டது. இதில் 7 மாதிரிகளைப் பெற்று, 6 மாதிரிகளில் காரீயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உட்பட மேலும் சில நிறுவன தயாரிப்புகளை 3 மாதங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தற்போது மேலும் பல நூடுல்ஸ் சோதனை முடிவுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெற்று வருகின்றனர். தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தடை செய்யப்பட்ட நூடுல்சை வைத்திருக்கும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதை விற்றால் கடைக்கு சீல் வைக்கும் அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES