சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஹாங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் அதிகமாக நடந்து வருகிறது. அதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தங்கள் கடமையை தேர்தல் அதிகாரிகள் செய்யவில்லை. தேர்தல் அதிகாரிகள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் தேர்தல் கமிஷன் சரியாக தனது கடமையை செய்யவில்லை என்பதை ஏற்கனவே வெளிப்படையாக கூறி இருக்கிறோம் என்றார்.
சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா முதல்வர் பதவி வகித்து கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.