கராச்சி: திருமணமான 30 வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 10 வயது சிறுவனுக்கு, ரூ 7 லட்சம் அபராதம் விதித்து பாகிஸ்தான் பழங்குடியின நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பங்க்லானி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன், பக்ரானி என்ற வேறொரு பழங்குடியினத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் இரு பழங்குடி இனத்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் பழங்குடியின நீதிமன்றமான 'ஜிர்கா' வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் விசாரணையின் முடிவில் 10 வயது சிறுவனுக்கு 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஜிர்கா உத்தரவிட்டது. இது போன்ற பஞ்சாயத்து நடைபெற்றது என்பதை சிந்து மாகாண தலைமை போலீஸ் அதிகாரி உமர் துபெய்ல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பழங்குடியின் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், எனவே இது குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.