ஆல் இந்திய ரேடியோவில் பாலியல் தொல்லை. புகார் கூறிய ஆர்.ஜே. தம்பதி பணி நீக்கம்!!


தமிழ் எஞ்சின்
சென்னை: சென்னையில் உள்ள ஆல் இந்திய ரேடியோவின் ரெயின்போ எப்.எம். நிலையத்தில் பாலியல் தொல்லைக்குள்ளான பெண் ரேடியோ ஜாக்கியையும், அவரது கணவரையும் வேலையை விட்டு நீக்கியுள்ள செயல் அதிர வைத்துள்ளது.

புகார் கூறியவர்களையே வேலையை விட்டு நீக்கியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் அவர்கள் சரியான முகவரியை வானொலி நிலையத்திற்குத் தராத காரணத்தால்தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக புரோகிராம் எக்சிகியூட்டிவ் ஆர். முரளி விளக்கியுள்ளார். இவர் மீதுதான் பாலியல் தொல்லை புகார் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. அதன் பின்னர் வானொலி நிலையத்தில் உள்ள பாலியல் தொல்லைக்கு எதிரான கமிட்டி விசாரணை நடத்தியது.

விசாரணையில் எந்த உருப்படியான முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து அகில இந்திய வானொலியின் பிராந்திய இயக்குநர் வரை புகார் கொடுத்தார் அப்பெண். ஆனால் பலன் இல்லை.

இதுகுறித்து நிர்மலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அன்தப் பெண் கூறுகையில், ‘நான் 2004ம் ஆண்டு ரெயின்போ வானொலியில் சேர்ந்தேன். திருமணத்திற்குப் பின்னர் தர்மபுரியில் குடியமர்ந்த, ரெயின்போ வானொலிக்காக நடந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன். பின்னர் ரேடியோ ஜாக்கியாக தேர்வானேன்.

பணியில் சேர்ந்தது முதலே முரளி எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். என்னைப் பார்த்து அடிக்கடி தேவையில்லாத கமெண்ட் அடிப்பார்.

இரவில் தனக்கு போன் செய்யச் சொல்வார். அலுவலகத்தில் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளைப் பிரயோகிப்பார். அவருடன் நான் பேசுவதையே நிறுத்தி விட்டேன். எனது கணவரும், எனது அலுவலகத்தில் கேஷுவல் அனவுன்சாராக இருந்தார். அவரிடம் இதுகுறித்து பேசினேன்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், எனக்கு உடன்படாவிட்டால், என்னை வேலையை விட்டு நீக்கப் போவதாக மிரட்ட ஆரம்பித்தார் முரளி. அதன் பிறகே நாங்கள் புகார் கொடுக்க முடிவு செய்தோம். முதலில் கூடுதல் இயக்குநரிடம் புகார் கொடுத்தோம். பின்னர் பாலியல் புகார்களுக்கான கமிட்டியிடம் புகார் கொடுத்தோம். விசாரணையும் நடந்தது. ஆனால் எங்களை தற்போது வேலையை விட்டு நீக்கியுள்ளனர்' என்றார்.

இதற்கிடையே, அனவுன்சராக இருக்கும் இன்னொரு பெண்ணையும் வேலையை விட்டு நீக்கியுள்ளதாம் அகில இந்திய ரேடியோ நிர்வாகம்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES