சென்னை: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய "பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கம்" அழைப்பு விடுத்தது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வருகிற 24 ஆம் தேதி புதன்கிழமையன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர், வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாங்க் ஆப் பரோடா வங்கி கூறியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் பீகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் போன்ற பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து இணை வங்கிகளும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கத்தின் கீழ் தான் வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே 24 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.