புருஷன் பொண்டாட்டி சண்டை! ஆளுக்கு ஒரு கோஷ்டியாக மாறி சரமாரி தாக்குதல்!!


ஈரோடு: க. பரமத்தி அருகே புருஷன் பொண்டாட்டித் தகராறு பெரிய கோஷ்டித் தகராறாக மாறியது. இந்த சண்டையில் கணவரும், மனைவியும் காயமடைந்தனர். க.பரமத்தி அடுத்த தென்னிலை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சப்பன் மகன் சக்திவேல் (46), இவரது மனைவி பிரேமா(35) இருவருக்கும் அவ்வப்போது வாய் தகராறு வருமாமம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியினருக்குள் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆதரவாளார்களோடு தம்பதியினா், உறவினர்களோடு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டதாக சக்திவேல் கரூர் தனியார் மருத்துவமனையிலும், மனைவி பிரேமா ஈரோடு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா. இது குறித்து தம்பதியினர் இருவரும் தென்னிலை போலீசில் தனி தனியாக கொடுத்த புகாரின் பேரில், இரண்டு வழக்குகளில் 7 பேருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES