சென்சார் போர்டை நெளிய வைத்த "காலண்டர் கேர்ள்ஸ்"!


மும்பை: இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கியுள்ள காலண்டர் கேர்ள்ஸ் படம் ஏற்கனவே பரபரப்பு அலையைப் பரப்பி வரும் நிலையில் சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தின் டிரெய்லரைப் பார்த்து அதிர்ந்து போய், கையில் கத்திரிக்கோலைத் தூக்கி விட்டனராம். காரணம், படத்தின் டிரெய்லரில் இருந்த நிர்வாணக் காட்சிதானாம். எவ்வளவு தைரியமாக டிரெய்லரிலேயே நிர்வாணக் காட்சியை வைப்பீர்கள் என்று ஒரு போர்டு உறுப்பினர் பண்டர்கரிடமே கேட்டு விட்டாராம்.

இப்போது டிரெய்லரில் மட்டுமல்லாமல் படத்திலிருந்தும் அந்த நிர்வாணக் காட்சிக்கு கட் கொடுக்கப்பட்டு விட்டதாம். ஐந்து அழகிய இளம் மாடல் அழகிகள் குறித்த கதைதான் இந்த காலண்டர் கேர்ள்ஸ் படம். இவர்கள் எப்படி மாடல் அழகிகளாக மாறுகிறார்கள், அதில் இவர்கள் சந்திக்கும் சவால்கள், இவர்களுக்கு முன்பு பரந்து விரிந்து காணப்படும் தவறான பாதை. அதில் சிக்கி சிதைகிறார்களா அல்லது வெல்கிறார்களா என்பதுதான் கதையாம். படம் முழுக்க பளபளவென்று அழகிகள் கூட்டத்தையும், கவர்ச்சியையும் மதுர் பண்டர்கர் வாரி இறைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் போஸ்டரே பிரளயத்தைக் கிளப்பியிருந்தது. இிந்த நிலையில் சென்சாருக்காக டிரெய்லரை அனுப்பி வைத்து சென்சார் போர்டையே பதற வைத்து விட்டார் பண்டர்கர்.

அதில் ஒரு நிர்வாணக் காட்சி இடம் பெற்றிருந்ததைப் பார்த்து போர்டு உறுப்பினர்கள் அதிர்ந்து போய் அதை கட் செய்யச் சொல்லி விட்டனராம். படத்திலிருந்தும் அதைத் தூக்கச் சொல்லி விட்டனராம். இப்படத்தில் அகன்ஷா பூரி, அவனி மோடி, கைரா தத், ரூஹி சிங், சதர்புரா பைன் ஆகிய அழகிகள் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES