கல்யாணத்துக்கு ஏன் 10 பொருத்தம் முக்கியம்னு சொல்றாங்க தெரியுமா?


தமிழ் எஞ்சின்
கல்யாணத்துக்கு ஏன் 10 பொருத்தம் முக்கியம்னு சொல்றாங்க தெரியுமா? X14-1513247655-marriage5-6.jpg.pagespeed.ic.4EVZQKnb8e

சென்னை: திருமணத்திற்கு பொருத்தம் பார்த்து திருப்தியாக இருந்தால் மட்டுமே பெண் பார்க்க வரச்சொல்லும் காலமாகிவிட்டது. 10 பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருக்கு என்பார்கள். கூடவே ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும். தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவை 10 பொருத்தங்களாக குறிப்பிடப்படுகின்றன. 10க்கு 8 பொருத்தம் சரியா இருக்கு, 7 பொருந்தி வந்திருக்கு என்று கூறுவார்கள். ஆனால் முக்கியமான பொருத்தங்கள் சரியாக வராவிட்டால் திருமணம் செய்து வைப்பது சரியாக வராது. ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு கூட்டி, கழித்து வகுத்து இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆணும், பெண்ணும் இணைந்து தங்களின் அடுத்த சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. காதல் திருமணம் செய்பவர்கள், ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதில்லை. ஆனால் பெற்றோர் பார்த்து செய்யும் திருமணத்தில் எல்லாமே சரியாக இருக்கிறதா என்று பார்த்து முடிக்க வேண்டும். மணமக்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளும் விதத்தில் இருவரின் நட்சத்திரங்களுக்கும் பொருத்தம் பார்ப்பது தினப்பொருத்தம் என அழைக்கப்படுகிறது. இருவருமே ஆரோக்கியத்துடன வாழ தினப்பொருத்தம் அவசியம். அதே போல குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் எப்படி இருக்கும்? சயன, சுக,போக பாக்கியத்தை இருவரும் அனுபவிக்க கணப்பொருத்தம் இருக்க வேண்டும்.

மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு,அன்பு ஆகியவை குறித்து அறிவது வசியப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது.வசியப் பொருத்தம் சிறப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது.

திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுதான் மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. குலம் விருத்தி அடையவும், புத்திரபாக்கியத்திற்காகவும் இந்த பொருத்தம் கண்டிப்பாக அவசியம் இருக்கவேண்டும். திருமணம் செய்வதன் முக்கிய அம்சமாகும். தனம், தான்யம் விருத்திக்கு ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் இருக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும். தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமையோடு செயல்பட ராசி அதிபதி பொருத்தம் இருக்க வேண்டும்.

தம்பதியர் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ ரஜ்ஜூ பொருத்தம் பார்க்க வேண்டும். ஆணுக்கும், பெண்ணிற்கும் ஒரே ரஜ்ஜூவாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதே போல வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்களை கடந்து வாழ்க்கையை ஒற்றுமையாக நடத்த வேதை பொருத்தம் முக்கியமானதாகும்.

நாடிப்பொருத்தம் ஒன்று பார்க்கின்றனர். இதன் முலம் கணவன், மனைவி இடையேயான ஆயுள் ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது. நாடிப்பொருத்தம் இல்லாவிட்டால் ஆண், பெண் இருவரிடையே தோஷம் ஏற்படும். வசியப்பொருத்தம் இருந்தாலும் வேதைப்பொருத்தம் இல்லாவிட்டால் வேதனைதான். அதோடு தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தமும் மிக மிக முக்கியம்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES