UAN எண் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்


தமிழ் எஞ்சின்
சென்னை: பிஎஃப் கணக்கிற்கு அளிக்கப்படும் பொதுக் கணக்கு எண் (UAN - Universal Account Number) பல்வேறு துறைகள் அல்லது நிறுவனங்கள் ஒரு தனி நபருக்கு வழங்கும் வெவ்வேறு குறியீட்டு எண்களை இணைக்கும் ஒரு பொதுவான எண்ணாக விளங்கும்.

அதாவது ஒருவர் வெவ்வேறு கம்பெனிகளுக்கு மாறினாலும் அவரது பிஎப் கணக்கு எண் மட்டும் மாறும் ஆனால் இந்தப் பொதுக் கணக்கு எண் மட்டும் புதிய மற்றும் பழைய நிறுவனங்களின் விவரங்களைத் தொடர்புப் படுத்தும். இந்த யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு எண்ணின் குறிக்கோள், ஒரே உறுப்பினருக்கு வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் எண்கள் ஒரு பொதுவான எண்ணின் கீழ் தொடர்புப் படுத்தப்படுவது தான். ஒரு உறுப்பினருக்கு ஏற்கனவே இந்த யுஏஎன் எண் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் புதிய நிறுவனத்தில் இணையும் போது இந்த எண்ணைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் புதிய நிறுவனம் புதிதாகத் தரப்படும் உறுப்பினர் எண்ணை குறித்துக்கொள்ள முடியும்.

1) யுஏஎன் நம்பரைப் பெறுவது எப்படி?

இது நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தினரால் தரப்படும். அது அவர்களிடம் தயாராக இருக்கும். அதை நீங்கள் இதுவரை பெறவில்லை என்றால், உங்கள் ஹெச் ஆர் அல்லது மனிதவளத் துறையை அணுகுங்கள்.

2) இணையத்தில் விவரங்களைப் பெறுவது எப்படி?

உறுப்பினர்கள் இந்த யுஏஎன் தொடர்பான உறுப்பினர் இணையத் தளத்தை அணுக வேண்டும். அதாவது http://uanmembers.epfoservices.in என்ற இணையதளத்தில் பெறலாம். முதலில் ஒரு ஒருப்பினர் இங்குத் தரப்பட்டுள்ள ACTIVATE YOUR UAN என்ற தொடர்பை அழுத்தி தன்னுடைய கணக்கை செயல்பட வைக்க அல்லது ஆக்டிவேட் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் தங்களுடைய யுஏஎன் எண், உங்களுடைய அலைபேசி எண் மற்றும் உறுப்பினர் குறியீட்டு எண்ணை தயாராக வைத்துக்கொண்டு பின்னர் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்ய அந்த இணையதளத்தில் முயற்சிக்கலாம்.

3) யுஏஎன் கார்டை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய முடியுமா?

நிச்சயமாக. முதலில் நீங்கள் உங்கள் சரியான யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு லாகின் செய்யுங்கள். பின்னர் "Download" மெனுவில் "Download UAN Card" என்ற தொடர்பை அழுத்தவும். இந்தக் குறிப்பிட்ட தொடர்பு மூலமாக யுஏஎன் கார்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

4) பழைய உறுப்பினர் எங்களுடன் இதனை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

இதன் மூலம் பழைய உறுப்பினர் எண் மற்றும் விவரங்களை ஒரே கணக்கின் கீழ் கொண்டுவர முடிவதுடன் பழைய தகவல்களை உடனடியாகப் பெற இது உதவும்.

5) ஒருவர் பணி மாற்றம் அடைந்தால் அவர் செய்யவேண்டியது என்ன?

அடுத்தடுத்து நீங்கள் சேரும் நிறுவனங்களில் உங்கள் யு ஏ என் எண்ணை கொடுத்தால் போதும்.

6) பதிவிறக்கம் அல்லது பிரிண்ட் செய்யும் வழிகள்
1. லாகின் செய்யவும் (உங்கள் யுஏஎன் எண்-தான் எப்போதும் உங்கள் யூசர் நேம் அல்லது உபயோகப் பெயர்) 2. டவுன்லோட் மெனுவில் "Download UAN card" என்ற தொடர்பை அழுத்துக
3. அதன்பின் யுஏஎன் கார்டை திறக்கையில் டவுன்லோட் என்ற தொடர்பை அழுத்தவும். இப்ப எல்லாம் தெளிவாகியிருக்கும். உடனே போய் உங்களுடைய கணக்கை ஆக்டிவேட் செய்து கணக்கை பராமரிக்கும் வேலையை எளிதாக்குங்கள்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES