காஞ்சிபுரத்துக்கு படையெடுக்கும் "குடிமக்கள்"...


தமிழ் எஞ்சின்
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் வந்தாலும் வந்தது சென்னை, திருவள்ளூர் மாவட்ட குடிகாரர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இரு மாவட்டங்களிலும் இடைத் தேர்தலையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இவர்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இங்கு நேற்று மாலை 5 மணிக்கு இந்த 2 மாவட்டங்களிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இனி 28 ம் தேதி காலை 10 மணிக்குதான் திறக்கப்படும்.

இதனால் நேற்று மாலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. குடிமகன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

பலர் பெட்டி பெட்டியாகவும், சிலர் முடிந்தவரை கைகளில் பிடித்துக் கொண்டும், சிலரோ, கைகளில் இடம் இல்லாமல் வாயில் வைத்து நாய் போல கவ்வியபடியும் போனதைப் பார்க்க முடிந்தது.

அதேசமயம், அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகள் வழக்கம் போல திறந்துள்ளன. இதனால் இங்குள்ள கடைகளுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள்.

கிண்டியைத் தாண்டியதுமே காஞ்சிபுரம் மாவட்டம்தான். எனவே ரொம்ப தூரம் போக வேண்டிய அவசியம் இல்லாததால் குடிமகன்கள் இந்தக் கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

தென் சென்னை குடிகாரர்களுக்குப் பிரச்சினை இல்லை. கொஞ்ச தூரத்திலேயே கடைகள் வந்து விடும். ஆனால் வட சென்னையின் கடைக் கோடியில் இருப்பவர்களுக்குத்தான் பெரும் சிரமமாக உள்ளது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES